இலங்கையில் வாகன சாரதி களுக்கு வெகுமதி வழங்கும் திட்டம் – பொலிஸார் அறிவிப்பு

இலங்கையில் வாகன சாரதி களுக்கு வெகுமதி வழங்கும் திட்டம் ஒன்று அறிமுகப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒழுக்கமான ஓட்டுநர்களுக்கு வெகுமதி அளிக்கும் முறையைத் தொடங்குவதற்கான ஒரு முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் F.U வுட்லர் தெரிவித்துள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு இதுவரை 400க்கும் அதிகமான உயிரிழப்பு விபத்துக்கள் பதிவாகியுள்ளது. இந்த அபாயகரமான விபத்துக்களில் 431 உயிர்கள் உயிரிழந்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கடுமையான வீதி விபத்துகளின் எண்ணிக்கை 925 என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீதி விபத்துக்களை குறைத்து உயிர்களை காப்பாற்ற வெகுமதி திட்டம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.