பல நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தயாராகி வரும் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பல நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, மூன்று பிரிவுகளின் கீழ் பொருத்தமான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பயணக் கட்டுப்பாடுகளை விதிப்படும் பட்டியலில் 41 நாடுகள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, ஆப்கானிஸ்தான், கியூபா, ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுலா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்கு முழுமையான விசா இடைநிறுத்தம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரித்திரியா, ஹைட்டி, லாவோஸ், மியான்மர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கான விசா இடைநீக்கத்தின் கீழ் இந்தப் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
கூடுதலாக, பாகிஸ்தான், பூட்டான், கம்போடியா, கேமரூன் மற்றும் காங்கோ குடியரசு உள்ளிட்ட 26 நாடுகள் பகுதி விசா விலக்குக்கு பரிந்துரைக்கப்பட்ட நாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.