இலங்கையில் அழகுசாதன பொருட்களை கட்டுப்படுத்த சட்டங்கள் இல்லை – வைத்திய நிபுணர்கள் கவலை!

இலங்கை இன்றுவரை அழகுசாதனப் பொருட்களின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தத் தவறியுள்ளது.
இது அங்கீகரிக்கப்படாத கிரீம்கள் மற்றும் பொருட்கள் சந்தையில் தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதால் கடுமையான உடல்நலக் கவலைகளுக்கு வழிவகுத்துள்ளது.
COPE குழு வெளியிட்ட தகவலுக்கு அமைய அழகு சாதன பொருட்களை முறைப்படுத்த முறையான சட்டம் இல்லாததால் இலங்கை இன்னும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில், சந்தையில் தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் இருப்பது குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன, அவை பயன்படுத்தப்பட்டால், சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டது.
வாசனை திரவியங்கள் மற்றும் கிரீம்களின் பயன்பாட்டை அவற்றுடன் தொடர்புடைய சுகாதாரப் பிரச்சினைகள் காரணமாக ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியத்தை COPE வலியுறுத்தியது.
இது தொடர்பாக எந்த நிறுவனத்திற்கும் சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்பது வெளிப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், அவர்களின் நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனார்.