வங்க தேசத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி : நீதி கோரி திரண்ட மக்கள்!

வங்கதேசத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்த சம்பவம் தற்போது வங்கதேசம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சிறுமி மார்ச் 5 ஆம் திகதி மதியம் தனது மூத்த சகோதரியின் வீட்டில் இந்த சம்பவத்தை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி, டாக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் 6 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த பிறகு இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் சகோதரியின் 18 வயது கணவர், அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, சிறுமியின் மரணத்தால் ஆத்திரமடைந்த மக்கள், சந்தேக நபர்களின் வீட்டிற்கு தீ வைத்தனர்.
பாதிக்கப்பட்டவருக்கு விரைவாக நீதி வழங்குமாறு போராட்டக்காரர்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர்.