இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

ட்ரம்ப் விதித்த அதிரடி தடை – 41 நாட்டு பிரஜைகள் பயணம் செய்வதில் சிக்கல்

அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்காக கடுமையாக செயற்பட்டு வரும் நிலையில் பல நாடுகளுக்கு உள்வருகை தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. .

இந்நிலையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான் , பெலாரஸ் ,பூட்டான் மற்றும் வனுவாட்டு உள்ளிட்ட 41 நாடுகளின் பிரஜைகளுக்கு அமெரிக்கா செல்ல தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.

பல்வேறு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இந்த தடை விதிக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி,இந்த நாடுகளை மூன்று குழுக்களாக பிரித்து முதல் குழுவில் உள்ள நாட்டினரின் விசாவை முழுமையாக ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாவது குழுவில் உள்ள நாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய தடையை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்,மூன்றாவது குழுவில் உள்ள நாடுகளுக்கு சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

(Visited 43 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்