துப்பாக்கி வைத்திருந்ததற்காக இலங்கை பாடகர் ஷான் புதா கைது
இலங்கையின் பிரபல ராப்பர் மற்றும் பாடகரான ‘ஷான் புத்தா’ ஹோமாகம பொலிஸாரால் 9மிமீ துப்பாக்கி வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அறிக்கைகளின்படி, மன்னார் பொலிஸில் பணிபுரியும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் ஷான் புத்தாவின் மேலாளர் ஆகியோரும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளில், சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மாத்தறை கொட்டுவில பொலிஸ் நிலையத்திலிருந்து துப்பாக்கியைத் திருடி கலைஞருக்கு வழங்கியதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)





