இலங்கை – அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ; ஒருவர் பலி
அம்பலாங்கொடை காவல் பிரிவுக்கு உட்பட்ட இடம்தோட்டையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை (14) மாலை 6.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு சிகிச்சைக்காக பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்ததாகவும் அம்பலாங்கொடை காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டையைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, மேலும் சந்தேக நபர்களைக் கைது செய்ய அம்பலாங்கொடை காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.





