வியட்நாம் ஹனோய் அடிக்குமாடிக் கட்டிட தீ விபத்து ; எட்டு பேருக்குச் சிறை

வியட்நாம் நீதிமன்றம் ஹனோய் அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் 8 பேருக்கு இன்று (மார்ச் 14) சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2023ஆம் ஆண்டு 9 மாடிக் கட்டடத்தில் மூண்ட தீக்கு 56 பேர் பலியாயினர்.
ஒரு நுழைவாயிலை மட்டும் கொண்ட அந்தக் கட்டடத்தில் அவசர ஏணியும் பொருத்தப்படவில்லை.தீ மூண்டபோது கட்டடத்துக்குள் சிக்கியிருந்தோர் தப்பிக்க வழியின்றி அலறியதைக் கேட்டதாக அக்கம்பக்கத்தினரும் குடியிருப்பாளர்களும் கூறினர்.
வியட்னாமிய நீதிமன்றம், கட்டடத்தின் உரிமையாளருக்குத்தான் ஆகக் கடுமையான தண்டனையை விதித்தது.
தீ தடுப்பு விதிமுறைகளை மீறியதற்காக நபருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இருப்பினும் தண்டனை இன்னும் கடுமையாக இருந்திருக்க வேண்டும் என்று மாண்டோரின் உறவினர்கள் கூறினர்.
உயிரிழந்தோரில் சிலர் பிள்ளைகள் என்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்தோரின் குடும்பத்துக்குக் கட்டட உரிமையாளர் 1.2 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையை இழப்பீடாகக் கொடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது