கேரள இஸ்லாமிய கல்லூரியில் மாணவி ; விசாரணையில் வெளியான மர்மங்கள்
கேரளாவில் உள்ள இஸ்லாமிய கல்லூரியில் படித்து வந்த 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், மர்மம் நிறைந்திருப்பதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கேரள மாநிலம் பீமா பள்ளியை சேர்ந்த 17 வயதான அஸ்மியா மோல் என்ற மாணவி, திருவனந்தபுரத்திற்கு அருகே பாலராமபுரத்தில் உள்ள அல் அமன் என்ற இல்ஸாமிய பள்ளியில் படித்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, கல்லூரியிலுள்ள நூலகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார், அஸ்மியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பின்னர் விசாரணையில் பல மர்மங்கள் வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரத்தை சேர்ந்த காவல் துறை அதிகாரிகள், இறந்த அஸ்மியாவின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில், அவரது தாய்க்கு மாணவியின் தோழியிடமிருந்து அவசரமாக வரச் சொல்லி போன் வந்துள்ளது.இதனை தொடர்ந்து, அவர் சரியாக 1.30 மணி நேரத்தில் கல்லூரிக்கு சென்றுள்ளார். கல்லூரிக்கு சென்றவுடன் அவரை கல்லூரி நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை.பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து அவரை உள்ளே அனுமதித்துள்ளார். அப்போது அவர் மகள் கல்லூரியிலுள்ள நூலகத்தில் தூக்கிட்டுத் தொங்கிய நிலையிலிருந்துள்ளார்.
எனவே அவரது மகளை கொலை செய்துவிட்டு, கல்லூரி நிர்வாகம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை சித்தரித்து நாடகம் ஆடுகிறது, என மாணவியின் தாய் கூறியுள்ளார்.இந்நிலையில் கடந்த பக்ரீத் பண்டிகைக்கு விடுமுறைக்கு வந்திருந்த மாணவி, தனக்கு கல்லூரி நிர்வாகத்தினர் சித்தரவதை செய்வதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.எனவே இதனை தொடர்ந்து பொலிஸார் கல்லூரி மாணவிகளிடம் விசாரிக்கையில், ஏற்கனவே அவர் குளியலறையில் உயிரிழந்து கிடந்ததாக தெரிய வந்துள்ளது.
பின்னர் பொலிஸாருக்கு மாணவியின் தற்கொலையில், கல்லூரி நிர்வாகம் சம்மந்தப்பட்டிருப்பதை அறிந்துள்ளனர். மேலும் அஸ்மிகா பக்ரீத் விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் போது நான் திரும்பி கல்லூரிக்கு வர விரும்பவில்லை என கூறியுள்ளார்.மேலும் அரபிக் கல்லூரிக்கும், மதப் பள்ளிக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று ஜமாஅத் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக திருவனந்தபுரம் பொலிஸார் கூடுதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.