கிரீன்லாந்தை இணைக்கும் தீவிர முயற்சியில் டிரம்ப் – நேட்டோவின் உதவியை பெற முயற்சி

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கான முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் தீவிரமாக்கியுள்ளார்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் நேட்டோ கூட்டணியின் தலைமைச் செயலாளர் மார்க் ரூட்டரைச் சந்தித்து டிரம்ப் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
சர்வதேச பாதுகாப்பை விரிவுபடுத்த கிரீன்லந்தை இணைத்துக்கொள்வது முக்கியம் என்று அவரிடம் டிரம்ப் கூறியுள்ளார்.
கிரீன்லாந்தை வசப்படுத்தும் யோசனையை டிரம்ப் பலமுறை வெளியிட்டிருக்கிறார். அதைச் செயல்படுத்த நேட்டோவின் உதவி தேவைப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரீன்லாந்தை கையகப்படுத்தும் டிரம்ப்பின் யோசனையை அந்தத் தீவின் பதவி விலகும் பிரதமர் மூட் ஈகட் நிராகரித்தார். அமெரிக்க ஜனாதிபதி சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கிரீன்லந்தின் ஜனநாயகக் கட்சி கூறியது.
நேற்று முன்தினம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்தக் கட்சி வெற்றிபெற்றது. கிரீன்லந்து மக்களில் பெரும்பாலோர் தீவை அமெரிக்காவுடன் இணைக்க எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
கிரீன்லாந்து அமைந்திருக்கும் இடத்தையும் அங்குள்ள வளங்களையும் அமெரிக்கா குறிவைப்பதாகத் தெரிகிறது. உலகின் ஆகப்பெரிய தீவான கிரீன்லந்து சுமார் 300 ஆண்டுகளாக டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ளது.