ஐரோப்பா

ஐரோப்பிய மதுபானங்களுக்கு 200 சதவீத வரி: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஐரோப்பாவிலிருந்து தருவிக்கப்படும் எல்லா வகை வைனுக்கும் மற்ற மதுபானங்களுக்கும் 200 சதவீத வரி விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறார்.

அமெரிக்க விஸ்கிக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கத் திட்டமிடும் வரியைக் கைவிடாவிட்டால் அமெரிக்காவும் வரி விதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்முடைய வரி விதிப்பு அமெரிக்காவின் வைன், வர்த்தகத்துக்குப் பயனளிக்கும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாது என்று கூறும் பிரான்ஸ், தனது தொழில்துறையைப் பாதுகாக்க உறுதியளித்தது.

ஐரோப்பிய ஒன்றியம் சென்ற ஆண்டு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்த வைனின் மதிப்பு 4.9 பில்லியன் யூரோவாகும். ஐரோப்பாவின் ஒட்டுமொத்த வைன் ஏற்றுமதியில் அது 29 சதவீதமாகும்.

அமெரிக்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் மதுபான ஏற்றுமதியில் சுமார் பாதியைப் பிரான்ஸ் செய்கிறது. இத்தாலியின் பங்கு சுமார் 40 சதவீதமாகும்.

(Visited 20 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்