அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்து- பல வாகனங்கள் தீக்கிரை

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள முதியோர் இல்லத்துக்கு முன் காணப்படும் வாகன நிறுத்துமிடத்தில் விமானம் கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கீழே விழுந்த சிறிது நேரத்தில் குறித்த விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விமானம் தீப்பிடித்ததையடுத்து வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 3 times, 3 visits today)