Uk – ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பயணிகளுக்கு சிறப்பு அறிவித்தல்

ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு விமான நிறுவனம் சிறப்பு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
டெர்மினல்கள் 1, 2 மற்றும் 3ஐ இணைக்கும் விமான நிலையத்தின் சுரங்கப்பாதை ஒன்றில் இன்று காலை எலக்ட்ரிக் கார் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளனத்தை தொடர்ந்து பயண தாமதம் ஏற்படும் என அறிவித்துள்ளது.
தீயை அணைக்க அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டன. வாகனம் முற்றிலுமாக சேதமடைந்தது, இருப்பினும் காயங்கள் எதுவும் இல்லை என குரூப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள விமான நிலைய செய்திதொடர்பாளர், டெர்மினல்கள் 2 மற்றும் 3 க்கு சாலை அணுகல் ஓரளவு தடைசெய்யப்பட்டுள்ளது.
பயணிகள் விமான நிலையத்திற்கு அதிக நேரம் பயணிக்குமாறும், முடிந்தவரை பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சமீபத்திய புதுப்பிப்புகளை Heathrow.com மற்றும் எங்கள் சமூக ஊடக சேனல்களில் காணலாம். இடையூறு ஏற்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.