அலமாரிகளில் தூங்கும் அரக்கர்கள் : டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் கைகளில் இருக்கும் அணு ஆயுதங்கள் “உலகின் முடிவாக” இருக்கும் என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள ஏவுகணை கையிருப்பின் ஆபத்துகள் குறித்து செய்தி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க அதிபர் இவ்வாறு கூறினார்.
தற்போது அணுவாயுதங்களை அதிகளவு கையிருப்பில் வைத்துருக்கும் நாடுகளாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா காணப்படுகின்ற நிலையில் இன்னும் 10 ஆண்டுகளில் சீனாவும் முன்னணியில் திகழும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மிக பெரிய அரக்கர்களுக்காக பல்லாயிரகணக்கான டொலர்கள் செலவழிகப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் இவை உலகை அழித்துவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)