அமெரிக்கா செல்லும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் திடீர் மாற்றம்
அமெரிக்கா செல்லும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் திடீர் மாற்றம
அமெரிக்காவில் செல்லும் குடியேறிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
COVID-19 காலத்துக் குடிநுழைவுக் கொள்கை காலாவதியான சில நாட்களில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
Title 42 கட்டுப்பாடு முடிவுக்கு வந்த பிறகு, மெக்சிகோ எல்லையில் குடியேறிகள் வருகை எதிர்பாரா அளவு பாதியாய்க் குறைந்திருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயல்வோருக்கு எதிராகக் குற்றவியல் தண்டனைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தியது குடியேறிகள் வருகை குறையக் காரணம் என்று அவர்கள் சுட்டினர்.
பைடன் நிர்வாகம் அத்தகைய கடுமையான நடைமுறையை மீண்டும் கொண்டு வந்திருக்கிறது.
டொனல்ட் டிரம்ப் (Donald Trump) அமெரிக்க அதிபராக இருந்தபோது Title 42 கட்டுப்பாடு முதன்முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
எல்லைகள் வழியாக COVID-19 பரவுவதைத் தடுக்க 2020ஆம் ஆண்டு மார்ச்சில் அந்தக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது.
சென்ற வாரம் வரை பைடன் நிர்வாகம் அந்தக் கட்டுப்பாட்டை நடப்பில் வைத்திருந்தது.