வர்த்தகப் போர் தீவிரம் – கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கும் சீனா

உலகில் வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்குச் சீனா புதிய வரியை அறிவித்துள்ளது.
சீனாவின் மின்சார வாகனங்கள், எஃகு, அலுமினியப் பொருள்களின் இறக்குமதிக்கு முன்னதாக கனடா வரி விதித்தது. அதற்குப் பதிலடியாகச் சீனாவும் புதிய வரியை விதிக்கிறது.
கனடாவின் தாவர எண்ணெய், பட்டாணி உள்ளிட்ட பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று சீன வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
கடலுணவுப் பொருள்களுக்கும், பன்றி இறைச்சிக்கும் கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து புதிய வரி நடப்புக்கு வரும் என்று பெய்ஜிங் தெரிவித்துள்ளது.
(Visited 7 times, 7 visits today)