அமெரிக்காவில் வரலாறு காணாத அளவு குறைந்த வண்ணத்துப்பூச்சிகள்

அமெரிக்காவில் வரலாறு காணாத அளவு வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.
மறைந்துவரும் அவற்றின் எண்ணிக்கை 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு 22 சதவீதம் குறைந்துள்ளதாகப் புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இந்நூற்றாண்டு பிறந்தது முதல் அமெரிக்காவின் 48 மாநிலங்களில் ஒட்டுமொத்த வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 1.3 சதவீதம் குறைந்துவந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக 114 வண்ணத்துப்பூச்சி இனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. 9 இனங்கள் மட்டுமே அதிகரித்துவருவதாக ஆய்வு சொல்கிறது.
ஏராளமான வண்ணத்துப்பூச்சி இனங்கள் அதிவேகமாகக் குறைகின்றன. 35 கண்காணிப்புத் திட்டங்களில் நடத்தப்பட்ட ஏறத்தாழ 77,000 கணக்கெடுப்புகளை அறிவியலாளர் குழு ஒன்றிணைத்துள்ளது.
12.6 மில்லியன் வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
பருவநிலை மாற்றம், வாழ்விடங்கள் அழிக்கப்படுவது, பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றால் வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.