செய்தி விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு அசாதாரணமான ஆட்டம் மற்றும் ஒரு அசாதாரணமான முடிவு. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வீட்டிற்கு கொண்டு வந்ததற்காக எங்கள் கிரிக்கெட் அணியைப் பற்றி பெருமைப்படுகிறோம்.

அவர்கள் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அற்புதமான ஒட்டுமொத்த அணிக்கு வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

அவரை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள்.

சிறப்பாக விளையாடிய நியூசிலாந்துக்கும் வாழ்த்துகள். ரோகித்தும், அவரது அணியினரும், சூழலுக்கு ஏற்ப தொடர் முழுதும் சிறப்பாக விளையாடினர் என தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், துபாயில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்திய அணியின் வெற்றி பயணம் தொடரட்டும் என தெரிவித்துள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!