அநுர இருக்கும் வரை, டிரானை தொட மாட்டார் – பாட்டளி

அநுர குமார திஸாநாயக்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் வரை அர்ஜுன் மஹேந்திரனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஹோமாகம தேர்தல் செயற்பாட்டு நிலையத்தை ஸ்தாபித்தல் மற்றும் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் குழு அறிமுகம் தொடர்பாக ஹோமாகமவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
“பியங்கர ஜயரத்ன வெசாக் சீட்டு விளையாடியதற்காக பிடிபட்டுள்ளார். மத்திய வங்கியை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட அர்ஜுன மஹேந்திரனை கொண்டுவருவதாக தெரிவித்தனர் அதுவும் நடக்கவில்லை.
தேசபந்துவை தொடவில்லை. அவருக்குப் பின்னால் டிரான் அலஸ் இருக்கிறார். . அநுர திஸாநாயக்க டிரான் அலஸை தொடமாட்டார்.
ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களை விமர்சிக்காமல், அல்ஜசீரா சம்பவம் போன்றவற்றின் விளம்பரத்தைப் பயன்படுத்திக் கொள்ளாமல், அரசாங்கம் பாராளுமன்றத்தில் முறையான சட்டங்களை இயற்ற வேண்டும், குற்றவாளிகள் மீது குற்றம் சாட்டி தண்டிக்க வேண்டும்..”