ஐரோப்பா

‘அபோகாலிப்டிக்’ கிளஸ்டர் குண்டுத் தாக்குதல் கிழக்கு உக்ரைன் உள்ளூர்வாசிகளை திகைக்க வைத்த ரஷ்யா

ரஷ்யா உக்ரேன் மீது 2022ஆம் ஆண்டு போர் தொடுத்தது முதல் அந்நாட்டுக் கிழக்குப் பகுதி மக்கள் ரஷ்ய குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு நன்கு பழக்கப்பட்டுவிட்டவர்கள்.ஆனால், மார்ச் மாதம் 7ஆம் திகதி ரஷ்யா மேற்கொண்ட கொத்துக்குண்டுவீச்சுத் தாக்குதல் அவர்களுக்கு ஒரு வித்தியாசமான, அதிர்ச்சி தரும் அனுபவம்.

டொனெட்ஸ்க் வட்டாரத்தின் மையத்தில் இருக்கும் டோபிரோபில்லா நகரை நோக்கி ரஷ்யா மேற்கொண்ட கொத்தாக விழுந்து, சிதறுண்டு பரவலாக வெடிக்கும் குண்டுகளை கொண்ட அந்தத் தாக்குதல் 11 பேரைக் கொன்றதுடன் மேலும் 40 பேருக்கு காயம் விளைவித்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஆறு சிறுவர்களும் அடக்கம் என்று உக்ரேன் நாட்டு அவசரநிலை சேவை மையம் தெரிவித்துள்ளது.

வானில் வெடித்து பல சிறிய குண்டுகளாக பரவலாக சிதறும் இந்தக் கொத்துக்குண்டுகள் மிகுந்த நாசத்தை விளைவிக்கக்கூடியவை என்று கூறப்படுகிறது. இந்த குண்டுகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் அனைத்துலக ஒப்பந்தத்தில் ரஷ்யா, உக்ரேன் இரு நாடுகளுமே கையெழுத்திடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!