ஜம்மியத்துல் உலமாவை விமர்சித்த அர்ச்சுனா

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டங்களில் உரிய முறையில் திருத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் அவரது உரையில்; முஸ்லிம் மக்களின் தனித்துவம் குறித்தும் பேசப்பட்டிருந்தது.
அவ்வாறு தனித்துவம் குறித்து பேசிய அவர், முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் 12 வயது திருமணம் குறித்தும் விவாகரத்தின் போது ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கு ஒரு சட்டம் என்றும் தனது வாதங்களை முன்வைத்திருந்தார்.
அத்துடன் ஜம்மியத்துல் உலமா சபையினை விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அவரது பேச்சுக்கு குறுக்கான பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் விவாக விவாகரத்து சட்டங்கள் குறித்து தெரியாமல் பேசுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 1 visits today)