யாழ்ப்பாணம் மற்றும் திருச்சிக்கு இடையே நேரடி விமான சேவையை வழங்கும் இண்டிகோ நிறுவனம்!

இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனம், யாழ்ப்பாணம் மற்றும் தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலையத்திற்கு இடையே தினசரி நேரடி விமான சேவையைத் தொடங்க முடிவு செய்துள்ளது.
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மார்ச் 30 ஆம் திகதி முதல் தனது சேவைகளைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கு இடையே விமானங்களுக்கான அதிக தேவையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இண்டிகோவின் உலகளாவிய விற்பனைத் தலைவர் வினய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
இந்த விமானப் பாதை வணிக மற்றும் மதப் பயணங்களுக்கு பிரபலமாகிவிட்டதாகவும், தினசரி நேரடி விமானங்கள் இயக்கப்படுவது இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
(Visited 20 times, 1 visits today)