கனடா, மெக்சிகோ பொருட்கள் மீதான வரி – ட்ரம்பின் முடிவில் மீண்டும் மாற்றம்

கனடா, மெக்சிகோ ஆகியவற்றின் பெரும்பாலான பொருட்களுக்கு வரி விதிக்கும் நடவடிக்கையை மீண்டும் ஒத்திவைக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை பொருட்கள் மீது வரி விதிக்கப்படப் போவதில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இரு நாடுகளின் பொருட்கள் மீதும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது. அது கடந்த செவ்வாய்க்கிழமை நடப்புக்கு வந்தது.
அமெரிக்கா வரியை ஒத்திவைத்துள்ள நிலையில் கனடாவும் அமெரிக்கப் பொருள்கள் மீது வரி விதிப்பதை தள்ளிவைக்கவுள்ளதாகக் கூறியுள்ளது.
வரி அடுத்த மாதம் 2ஆம் திகதி விதிக்கப்படப் போவதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)