இலங்கையில் முன்னாள் பொலிஸ் உயர் அதிகாரிக்கு வலைவீச்சு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் தலைமறைவாகி உள்ள நிலையில், அவர் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறியத்தருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
கைது செய்வதற்கான நடவடிக்கையில் பல பொலிஸ் குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், யாராவது அவர் தலைமறைவாக இருப்பதற்காக உதவி புரிவார்களானால், அவர்களுக்கு எதிராகவும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
(Visited 4 times, 4 visits today)