நரகத்துக்குச் செல்ல வேண்டியிருக்கும் – காசாவிற்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை விடுவிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘நான் கூறுவதைப் போன்று நீங்கள் செய்யாவிட்டால் ஒரு ஹமாஸ் உறுப்பினரேனும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்’ என அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
அந்த பணிகளை நிறைவு செய்வதற்கு இஸ்ரேலுக்கு தேவையான சகலவற்றையும் தாம் அனுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணயக் கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் ஹமாஸ் தரப்பினர் நரகத்துக்குச் செல்ல வேண்டியிருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
பணயக் கைதிகள் தொடர்பில் ஹமாஸ் தரப்பினருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்திய சில மணிநேரங்களுக்குப் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் ஹமாஸ் தரப்பினருடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதனை அமெரிக்க தவிர்த்து வந்தது.
இந்தநிலையில், தற்போது ஹமாஸ் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் அமெரிக்கா, இஸ்ரேலுடன் கலந்துரையாடியதாக வெள்ளை மாளிகையின் பேச்சாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.