ரஷ்யாவில் பயணப்பெட்டிகளில் மனித உடல் – கண்டுபிடித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள நதியொன்றில் உயிரிழந்த ஒருவரின் உடல் உறுப்புகள்கொண்ட இரு பயணப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஒரு பெட்டியில் உயிரிழந்தவலின் உடலின் மேற்பகுதி பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்தது.ஆனால், உள்ளுறுப்புகள் எதுவும் காணப்படவில்லை.
மற்றொரு பெட்டியில் உயிரிழந்தவரின் தலை, கைகள், கால்கள் வைக்கப்பட்டுள்ளது. உடலைப் பரிசோதித்த அதிகாரிகள் தலை, கன்னங்கள், தாடைப் பகுதிகளில் கடுமையான காயங்கள் இருந்ததாக கூறியுள்ளார்.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவர் 20இலிருந்து 30 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
கண்காணிப்புக் கமரா பதிவுகளில் இளஞ்சிவப்பு, கருப்பு நிறம் கொண்ட இரு பயணப்பெட்டிகளை இருவர் நதியின் மேல் உள்ள பாலத்திற்குக் கொண்டு செல்வது தெரிவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது. உடலுறுப்புக் கடத்தல் அல்லது நரமாமிசத்திற்காகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.