நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் கிரேக்க அரசாங்கம்

2023 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொடிய ரயில் விபத்தை கையாண்டதற்காக அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைத் தொடங்க கிரேக்க எதிர்க்கட்சிகள் ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளன.
அரசியல் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் நாட்டை ஸ்தம்பிக்க வைத்த சில நாட்களுக்குப் பிறகு இந்த தீர்மானம் சமர்பிக்கப்பட்டுளள்து.
சோசலிச PASOK கட்சியின் தலைவர் நிகோஸ் ஆண்ட்ரோலாகிஸ் அரசாங்கத்தின் “குற்றவியல் திறமையின்மை” தொடர்பாக இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
சிரிசா, புதிய இடது மற்றும் சுதந்திரப் பாதை உட்பட மூன்று இடதுசாரிக் கட்சிகள் இந்த முடிவை ஆதரித்தன. வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெறும்.
பாராளுமன்றத்தில் 300 இடங்களில் 156 இடங்களைக் கொண்ட பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ், இந்த தீர்மானத்தில் இருந்து தப்பிப்பிழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.