லண்டன் விபத்தில் முல்லைத்தீவு குடும்பஸ்தர் பலி

லண்டனில் நடந்த விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (03) லண்டனில் நடந்த விபத்தில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பை சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்டபோது வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் இவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பை சேர்ந்த சின்னதம்பி கருணாகரன் வயது-49 என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை லண்டன் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)