இலங்கையில் 40 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு தேசிய அளவிலான சுகாதார பரிசோதனை திட்டம்

40 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களும் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய சுகாதார பரிசோதனை திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அரசாங்கத்தின் நீண்டகால தேசிய சுகாதாரக் கொள்கையுடன் இணைந்த இந்த முயற்சியானது, தொற்றாத நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சுகாதார அமைச்சு கிராமப்புற சமூகங்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவைகள், பரிசோதனைகள் மற்றும் இலவச மருந்துகளை வழங்கும் “Suwa Udana” நடமாடும் சுகாதார கிளினிக் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுகாதார பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேயமுனி, இந்த முயற்சியானது பொது சுகாதார வசதிகளை மேம்படுத்துவதில், குறிப்பாக பின்தங்கிய மக்களுக்கான ஒரு முக்கிய படியாகும் என்றார்.