மர்மமான முறையில் செலன்ஸ்கி உயிரிழப்பார் : ரஷ்ய தொலைக்காட்சியில் பகிரங்க மிரட்டல்!

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கிக்கு பகிரங்க உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய தொலைகாட்சி ஒன்றில் புதினுக்கு ஆதரவான எம்.பி.யும் கொலைகாரர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவரும், இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளனர்.
வொலோடிமிர் செலன்ஸ்கி சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்துவிடுவார் என அவர்கள் மிரட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கியேவிற்கு இராணுவ உதவியை நிறுத்த அமெரிக்கா எடுத்த முடிவைத் தொடர்ந்து போரில் ரஷ்யா வெற்றி பெற்றதை உணர்ந்த பின்னர், புதினின் தீவிர ஆதரவாளர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜெலென்ஸ்கி இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்தால் ஒரு பயங்கரமான மரணத்தை சந்திப்பார் என்று ரஷ்ய எம்.பி. ஆண்ட்ரி லுகோவாய், தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)