பிரித்தானியாவிற்கு இடம்பெயரும் அமெரிக்கர்கள் : ஆட்சிமாற்ற காலப்பகுதியில் நிகழ்ந்த மாற்றம்!

அமெரிக்காவில் நிர்வாகம் மாறியதை தொடர்ந்து பெரும்பாலான அமெரிக்கர்கள் பிரித்தானிய குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் 6,100 க்கும் மேற்பட்ட அமெரிக்க குடிமக்கள் விண்ணப்பித்ததாக அரசாங்க புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இது 2004 இல் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். 2024 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள் கடந்த 20 ஆண்டுகளில் எந்தவொரு காலாண்டிலும் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
அதேநேரம் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் 1,708 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன, இது டிரம்பின் நவம்பர் 4 மறுதேர்தலை உள்ளடக்கிய காலகட்டமாகும்.
பாதுகாப்பான நாடுகளிலிருந்து இடம்பெயர்பவர்களுக்கு, அரசியல் என்பது மூன்றாவது அல்லது நான்காவது வரிசை காரணியாகவே இருக்கும் என நிபுணர்கள் என சுட்டிக்காட்டியுள்ளனர்.