தொழிற்கட்சி அரசாங்கத்தை எதிர்த்து மத்திய லண்டனில் ஒன்றுத் திரண்ட விவசாயிகள்!
மத்திய லண்டனில் நேற்று (04.03) நடைபெற்ற ‘பான்கேக் தினப் பேரணியில்’ ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது அரசாங்கத்தின் மரபுரிமை வரிக் கொள்கைக்கு எதிராகப் போராடுவதை நிறுத்த மாட்டோம் என்று சபதம் செய்தனர்.
ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலிக்க, ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை கடந்து சென்றதுடன், நாங்கள் பின்வாங்கமாட்டோம் என கோஷமிட்டுள்ளனர்.
£1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பண்ணைகளுக்கு 20 சதவீத மரபுரிமை வரி விகிதத்தை அறிமுகப்படுத்தும் தொழிற்கட்சி அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.





