மெக்சிகோ மற்றும் கனடா மீதான வரிகள் அமுலுக்கு வந்துள்ளன : ட்ரம்ப் விதிக்கும் நிபந்தனை!

மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து வரும் பொருட்களுக்கு டொனால்ட் டிரம்பின் 25% வரிகள் அமலுக்கு வந்துள்ளன.
அதே போல் சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரிகள் விதிக்கப்பட்டுள்ளன, இதனால் மொத்த இறக்குமதி வரி 20% ஆக உயர்ந்துள்ளது.
கனடா மற்றும் மெக்சிகோவில் தொழிற்சாலைகளைக் கொண்ட அமெரிக்க நிறுவனங்கள், கார் தயாரிப்பாளர்கள் போன்றவற்றால் இந்த வரிகள் பெரிதும் உணரப்படும்.
மேற்படி நிறுவனங்கள் அமெரிக்காவில் தொழிற்சாலைகளை நிறுவவதன் மூலம் வரிவிலக்கு வழங்கப்படும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 2 visits today)