வவுனியாவில் உளுந்து வடை வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வவுனியாவில் உளுந்து வடையில் சட்டைப்பின் (Safety pin) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உணவகம் ஒன்றிலிருந்து வாடிக்கையாளர் ஒருவர் நேற்று வாங்கிய உளுந்து வடையிலேயே இந்த சட்டைப்பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் உளுந்து வடையை வாங்கி, வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது குடும்பத்தினருடன் சாப்பிடத் தயாராக இருந்தபோது, உளுந்து வடைகளில் ஒன்றிலேயே இவ்வாறு சட்டைப்பின் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து உணவக உரிமையாளரைச் சந்தித்துத் திட்டிய பிறகு, உணவக உரிமையாளர் வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அத்துடன் உளுந்து வடைக்காகப் பெற்றுக் கொண்ட பணத்தையும் உணவக உரிமையாளர் திருப்பிக் கொடுத்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)