அமெரிக்காவில் 24 காலுறைகளை வயிற்றில் வைத்திருந்த நாய்!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நாய் குட்டி ஒன்றின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் 24 காலுறைகளை வைத்தியர்கள் அகற்றியுள்ளனர்.
7 மாதமான லூனா என்ற நாய் குட்டியின் வயிற்றிலிருந்து இவ்வாறு காலுறைகள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக நாய் குட்டியின் வயிறு வீங்கியிருந்ததாகவும் கடுமையான குடல் அடைப்பு ஏற்பட்டிருந்ததன் காரணமாக நாயின் உரிமையாளர் நாயை விலங்குகள் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதையின்போது குறித்த நாய் காலுறைகளை விழுங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
அறுவை சிகிச்சையின் பின்னர் காலுறைகள் மீட்கப்பட்டன. அறுவை சிகிச்சையின் பின்னர் குறித்த நாய் நலமாக இருப்பதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 8 times, 8 visits today)