AI அம்சங்களுடன் கூடிய Samsung galaxy A56, A36, A26 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

கேலக்ஸி A36 மற்றும் கேலக்ஸி A56 ஆகிய மூன்று புதிய A சீரிஸ் போன்களை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது பல AI அம்சங்களைக் கொண்டுள்ளது மற்றும் ஆறு வருட OS மேம்படுத்தல்களையும் வழங்குகிறது. மிட் ரேஞ்ச் போன்கள் நல்ல டிஸ்ப்ளே, வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் ஈர்க்கக்கூடிய கேமரா அமைப்புகளைக் கொண்டுள்ளன.
இந்த மூன்று ஸ்மார்ட்போன்களிலும் 6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000mAh பேட்டரி ஆகியவற்றுடன் வருகிறது. இந்த மிட் ரேஞ்ச் ஃபோன்கள் 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகின்றன.
மேலும், இந்த ஃபோன்கள் ஆனது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான One UI 7 இன்டர்பேஸ் மூலம் இயங்குகின்றன மற்றும் 50MP ரியர் கேமராவைக் கொண்டுள்ளன.
கேலக்ஸி A56 ஸ்மார்ட்போன் ஆனது பிங்க், ஆலிவ், கிராஃபைட் மற்றும் லைட் கிரே ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கிறது. கேலக்ஸி A36 ஸ்மார்ட்போன் ஆனது லாவெண்டர், பிளாக், வைட் மற்றும் லெமன் ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கிறது. கேலக்ஸி A26 ஸ்மார்ட்போன் ஆனது பிளாக், வைட், மின்ட் மற்றும் பீச் பிங்க் ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கிறது.
கேலக்ஸி A26 ஸ்மார்ட்போனின் 6ஜிபி/128ஜிபி மாடல் ஆனது ரூ.26,200 விலையிலும் மற்றும் 8ஜிபி/256ஜிபி மாடல் ஆனது ரூ.32,900 விலையிலும் கிடைக்கிறது. அதே சமயம் கேலக்ஸி A36 ஸ்மார்ட்போனின் 6ஜிபி/128ஜிபி மாடல் ஆனது ரூ.35,000 விலையிலும் மற்றும் 8ஜிபி/256ஜிபி மாடல் ஆனது ரூ.36,200 விலையிலும் கிடைக்கிறது. கேலக்ஸி A56 ஸ்மார்ட்போனின் 8ஜிபி/128ஜிபி மாடல் ஆனது ரூ.43,700 விலையிலும் மற்றும் 8ஜிபி/256ஜிபி மாடல் ஆனது ரூ.48,000 விலையிலும் கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி A26: விவரக் குறிப்புகள்
டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி A26 ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் லேயருடன் 6.7 இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
ப்ராசசர்: சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போனில் A26 Exynos 1380 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
மெமரி: இந்த ஸ்மார்ட்போனில் 6 ஜிபி/8 ஜிபி ரேம் மற்றும் மைக்ரோSD கார்டு வழியாக விரிவாக்கக்கூடிய 256 ஜிபி வரையிலான ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது.
OS: ஆண்ட்ராய்டு15 அடிப்படையிலான One UI 7 கஸ்டம் ஸ்கின் மூலம் இயங்குகிறது. இது தவிர நிறுவனமானது 6 OS அப்டேட்கள் மற்றும் 6 வருட செக்யூரிட்டி பேட்ச்களை வழங்குகிறது.
கேமரா: கேலக்ஸி A26 ஆனது f/1.8 அப்பர்சர் உடன் கூடிய 50 மெகாபிக்சல் OIS பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ யூனிட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, 13 மெகாபிக்சல் ஷூட்டரைக் கொண்டுள்ளது.
பேட்டரி: 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி A36: விவரக் குறிப்புகள்
டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி A36 ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் 6.7 இன்ச் sAMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. பாதுகாப்புக்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 7+ லேயர் உள்ளது.
ப்ராசசர்: இதில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
மெமரி: இந்த ஸ்மார்ட்போனில் சிப்செட் 6ஜிபி/8ஜிபி, 12ஜிபி ரேம் மற்றும் மைக்ரோSD கார்டு வழியாக மேலும் விரிவாக்கக்கூடிய 256ஜிபி வரையிலான ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது
OS: இது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான One UI 7 கஸ்டம் ஸ்கின் மூலம் இயங்குகிறது. இது தவிர நிறுவனமானது 6 OS அப்டேட்கள் மற்றும் 6 வருட செக்யூரிட்டி பேட்ச்களை வழங்குகிறது.
advertisement
கேமரா: கேலக்ஸி A36 ஆனது 50 மெகாபிக்சல் OIS பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு 12 மெகாபிக்சல் ஷூட்டரைக் கொண்டுள்ளது.
பேட்டரி: 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.