ஜெர்மனியில் பாதசாரதிகள் மீது மோதிய கார் : தீவிர ஆபத்து எச்சரிக்கையை விடுத்த பொலிஸார்!

ஜெர்மனியில் பாதசாரிகள் மீது வாகனம் மோதியதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என்றும், பலர் காயமடைந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
மன்ஹெய்ம் நகரில் இன்று (03.03) பிற்பகல் ஒரு கருப்பு SUV வாகனத்தின் ஓட்டுநர் கூட்டத்தின் மீது வாகனத்தை மோதியதாக நம்பப்படுகிறது.
அவசரகால மீட்புப் பணியாளர்கள் களத்தில் பணியாற்றுவதை ஆன்லைனில் வெளியிடப்பட்ட படங்களில் காணக்கூடியதாக உள்ளது.
சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறைந்தது ஒரு நபராவது கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 2 times, 2 visits today)