ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடுவோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி!

ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் புகலிட நிறுவனம் 27 நாடுகள் கொண்ட கூட்டமைப்பிற்கான அதன் வருடாந்திர அறிக்கையை இன்று (03.03) வெளியிட்டது.
அறிக்கையின்படி சர்வதேச அகதிகள் சட்டத்தின் கீழ், மோதல் அல்லது துன்புறுத்தலில் இருந்து தப்பிச் செல்லும் மக்கள் புகலிடம் கோரும் உரிமையைப் பெற்றுள்ளனர்.
அதேநேரம் வறுமையிலிருந்து தப்பிச் செல்லும் அல்லது சிறந்த வேலை வாய்ப்புகளைத் தேடும் புலம்பெயர்ந்தோரின் விண்ணப்பங்கள் பொதுவாக நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான புகலிட விண்ணப்பங்கள் செய்யப்பட்டன. இது முந்தைய ஆண்டை விட 11% குறைவு.
237,000 கோரிக்கைகளுடன், புகலிடம் கோருபவர்களால் தேடப்படும் முக்கிய நாடாக ஜெர்மனி தொடர்ந்து இருந்தபோதிலும், 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 29 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.