பிரித்தானிய மன்னர் ட்ரம்பிற்கு விடுத்த அழைப்பு : இரத்து செய்யுமாறு கையெழுத்திட்ட மக்கள்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் விடுத்த அழைப்பு பிரித்தானிய மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பிரதமர் சர் கீர் ஸ்டார்மர், டிரம்பிடம் மன்னரிடமிருந்து எழுத்துப்பூர்வ அழைப்பை வழங்கினார்.
இந்த ஆண்டு இறுதியில் “முன்னோடியில்லாத” இரண்டாவது அரசுப் பயணத்தை மேற்கொள்ள டிரம்பிற்கு அந்தக் கடிதம் அழைப்பு விடுத்தது. டிரம்ப் அழைப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டார்,
ஆனால் ட்ரம்பின் அழைப்பை இரத்து செய்யுமாறு வலியுறுத்தும் மனு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இதற்கு எழுபதாயிரம் பேர் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
ட்ரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை நடத்திய பிறகு, அவர் எங்கள் நண்பர் அல்லது ஜனநாயகத்தின் கூட்டாளி அல்ல என்பதைக் காட்டியுள்ளார்.
சரியானதைச் செய்வதில் அவரைப் புகழ்ந்து பேச முயற்சிக்கும் தந்திரோபாயம் தோல்வியடைந்தது. அவர் எந்த வகையான மரியாதைகளையும் பெற வேண்டியவர் அல்ல. அரசு வருகைக்கான வாய்ப்பை ரத்து செய்ய வேண்டும்.” என வலியுறுத்தப்பட்டுள்ளது.