உலகின் மிகச் சிறிய பூங்கா ஜப்பானில் – கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகம் அங்கீகாரம்

ஜப்பானின் நகாய்சுமி நகரில் அமைந்துள்ள பூங்காவை உலகின் மிகச் சிறிய பூங்கா என கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகம் அங்கீகரித்துள்ளது
இந்த பூங்கா 0.24 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளதாக தெரியவந்துள்ளது. அது A3 அளவுகொண்ட இரு தாளுக்குச் சமம் என்று கின்னஸ் உலகச் சாதனை அமைப்பு கூறியது.
அந்த நகரில் மேற்கொள்ளப்பட்ட நிலச் சீரமைப்புப் பணிகளால் அவ்விடத்திற்குப் பலன் இல்லாமல் போனது.
ஜப்பானிய நகரம் தொடர்ந்து அதனை உலகின் ஆகச் சிறிய பூங்காவாகக் கருதியதால் அண்மை ஆண்டுகளில் பூங்கா சமூக ஊடகத் தளங்களில் பிரபலமானது.
கின்னஸ் உலகச் சாதனை அமைப்பு சென்ற செவ்வாய்க்கிழமை (25 பிப்ரவரி) சான்றிதழை வழங்கியது.
இதற்கு முன்னர் அமெரிக்காவின் ஆரெகன் மாநிலத்தில் உள்ள போர்ட்லண்ட் நகரில் இருந்த பூங்கா அந்தச் சாதனையைப் படைத்திருந்தது.
போர்ட்லண்டின் பூங்கா 0.29 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.