இந்தியா

கேரளா – சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்… 107ஆண்டு சிறைத் தண்டனை வழங்கிய நீதிமன்றம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஈழவதிருத்தி கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் என்ற மோகனன். 60 வயது முதியவரான இவர் 11 வயது சிறுவனை ஆள் இல்லாத நேரத்தில் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் அந்தச் சிறுவனை கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

இது தொடர்பான புகாரில் பொன்னானி காவல்துறையினர் தாமோதரனைக் கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கு விசாரணை பொன்னானி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை (28) தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட முதியவர் தாமோதரனுக்கு அவர் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 107 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி சுபிதா சிரக்கல் தீர்ப்பு வழங்கினார்.

மேலும் அவருக்கு ரூ.4.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையைப் பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அதனைச் செலுத்தத் தவறினால் தாமேதரன் மேலும் 6.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

(Visited 30 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே