NXT Conclave 2025: இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார் ரணில்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, NXT மாநாட்டின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்தார்.
புது டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் மாநாடு இடம்பெற்றிருந்தது.
இதன்போது தெற்காசியா குறித்த சொற்பொழிவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிருந்தமையும் சிறப்பம்சமாகும்.
மேலும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் குழுவுடன் அவர் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்க நாளை ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
(Visited 4 times, 4 visits today)