அதிபர் ட்ரம்புடன் ஏற்பட்ட மோதலுக்கு உக்ரைனுக்கு நிதி உதவியை அதிகரிக்க திட்டமிட்டுள்ள நோர்வே

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றன.இதன் தொடர்ச்சியாக உக்ரேனுக்கு நிதியுதவியை அதிகரிக்க நார்வே திட்டமிட்டு வருகிறது.
சனிக்கிழமை என்ஆர்கே பொது ஒளிபரப்பு நிறுவனத்திடம் பேசிய நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோயர், உக்ரேனுக்கான நிதி ஆதரவை அதிகரிக்க நாடாளுமன்றத்தில் அரசாங்கம் கோரிக்கை விடுக்கும் என்று தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டில் உக்ரேனுக்கான ராணுவ, குடிமக்கள் ஆதரவுக்கு மொத்தம் 35 பில்லியன் நார்வே கிரவுன்ஸ் ($3.12 பில்லியன்), 2023 முதல் 2030 வரையிலான ஆண்டுகளில் மொத்தம் 155 பில்லியன் கிரவுன்ஸ் செலவழிக்க நார்வே நாடாளுமன்றம் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒப்புதல் அளித்தது.
இதற்கிடையே ஞாயிற்றுக் கிழமை லண்டனில் ஐரோப்பிய தலைவர்களையும் உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கியையும் பிரதமர் ஸ்டோயர் சந்திக்கவிருக்கிறார்.
வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பும் ஸெலன்ஸ்கியும் உலக ஊடகங்களுக்கு முன்பு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு நாடுகளுக்கு இடையிலான கனிமவள ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.