சீனாவில் ஆற்றில் கவிழ்ந்த படகு : 11 பேர் நீரில் மூழ்கி பலி!

தெற்கு சீனாவில் உள்ள ஒரு ஆற்றில் எண்ணெய் கசிவு சுத்தம் செய்யும் கப்பல் ஒரு சிறிய படகு மீது மோதியதில் 11 பேர் கொல்லப்பட்டனர், மேலும் ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹுனான் மாகாணத்தில் உள்ள யுவான்ஷுய் ஆற்றில் ஏற்பட்ட விபத்தில் பத்தொன்பது பேர் கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதே நாளில் மூன்று பேர் மீட்கப்பட்டதாக நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.
மக்கள் தங்கள் கிராமத்திலிருந்து வந்து செல்லும் முக்கிய வழித்தடத்தில் இந்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகறிது.
(Visited 1 times, 1 visits today)