டிரம்புடன் கடும் வாக்குவாதம் – ஜெலன்ஸ்கிக்கு ஆதரவு வழங்கும் ஐரோப்பிய நாடுகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் ஜெலன்ஸ்கிக்கு, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நீங்கள் தனியாக இல்லை என்று போலந்து பிரதமரும், உக்ரேனியர்களை விட அமைதியை யாரும் விரும்பவில்லை என்று ஜெர்மன் சான்ஸ்லர் ஓலாஃப் ஸ்கால்சும் தெரிவித்துள்ளனர்.
உக்ரேனிய மக்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரானும், உங்கள் கண்ணியம் உக்ரேனிய மக்களின் தைரியத்தை மதிக்கிறது என்று ஐரோப்பிய ஒன்றிய அர்சுலா ஒண்டர் லியனும் தெரிவித்துள்ளனர்.
(Visited 3 times, 3 visits today)