சூடானில் ராணுவ விமானம் விபத்தில் 46 பேர் பலி

சூடானில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 46 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.
இறந்தவர்களில் மூத்த இராணுவத் தளபதிகளும் அடங்குவர்.
வடமேற்கு நகரமான ஓம்டுர்மானில் உள்ள இராணுவத்தின் முக்கிய இராணுவ தளங்களில் ஒன்றான வாடி சைட்னா விமானப்படை தளத்திற்கு அருகில் செவ்வாய்க்கிழமை இரவு அன்டோனோவ் விமானம் விபத்துக்குள்ளானது.
இது மிகப்பெரிய இராணுவ மையங்களில் ஒன்றாகும். புறப்படும் போது இந்த விபத்து ஏற்பட்டது.
இறந்தவர்களில் ஒரு மூத்த தளபதி மேஜர் ஜெனரல் பஹர் அகமதுவும் ஒருவர்.
தொழில்நுட்பக் கோளாறால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்துக்குப் பிறகு, பலத்த வெடிச்சத்தம் கேட்டதாகவும், கடும் புகையைக் கண்டதாகவும், பல வீடுகள் சேதமடைந்ததாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
விபத்தைத் தொடர்ந்து அருகிலுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
குழந்தைகள் உட்பட காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.