இலங்கை: மார்ச் மாதத்தில் “தேசிய மகளிர் வாரம்” பிரகடனப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

2025 சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில் மார்ச் மாதத்தில் “தேசிய மகளிர் வாரம்” பிரகடனப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை 1977 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக அறிவித்தது, அதன் பின்னர் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடி வருகின்றன.
இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் “அனைத்து பெண்கள் மற்றும் பெண்களுக்கு சமத்துவம், அதிகாரமளித்தல் மற்றும் கண்ணியம்” என்ற கருப்பொருளாகும்.
இதன்படி, சர்வதேச மகளிர் தினத்தை தேசிய ரீதியில் நினைவுகூருதல் உட்பட தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் என்ற வகையில் பிரதமரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அந்தவகையில், 2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில், “நிலையான நாளை கட்டியெழுப்புதல்-அவரது பலமே பாதை” என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டு மார்ச் 02 முதல் 08 வரை “தேசிய மகளிர் வாரம்” பிரகடனப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.