அமெரிக்காவுடனான நேரடிப் பேச்சுவார்த்தையை நிராகரிக்கும் ஈரான்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிகபட்ச அழுத்தத்திற்கு மத்தியில், ஈரான் தனது நாட்டின் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடாது என்று வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.
ஈரானின் முக்கிய வருமான ஆதாரமான ஈரானின் எண்ணெய் தொழிற்துறையை குறிவைத்து அமெரிக்கா புதிய சுற்றுத் தடைகளை விதித்த ஒரு நாளுக்குப் பிறகு அவரது கருத்துக்கள் வந்துள்ளன.
“அணுசக்தி பேச்சுவார்த்தைகள் தொடர்பான ஈரானின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது, மேலும் அழுத்தம் மற்றும் தடைகளின் கீழ் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்” என்று தெஹ்ரானில் தனது ரஷ்ய சகா செர்ஜி லாவ்ரோவுடன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது அரக்சி குறிப்பிட்டார்.
“இந்த வழியில் அதிகபட்ச அழுத்தம் பயன்படுத்தப்படும் வரை அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைகளுக்கு எந்த சாத்தியமும் இல்லை.” எனவும் தெரிவித்தார்.