இலங்கை ஜனாதிபதிக்கும் இராணுவ உயர் அதிகாரிகளுக்குமிடையில் சந்திப்பு!

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இராணுவ உயர் அதிகாரிகளுடனான குறித்த கலந்துரையாடலின் போது, இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு நிலை எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்
(Visited 2 times, 2 visits today)