இலங்கையில் நிலவும் வறண்ட வானிலை : 7000 மக்கள் நீர் இன்றி பாதிப்பு!

நாட்டை பாதிக்கும் வறண்ட வானிலை காரணமாக, பல மாவட்டங்களில் 7,000 க்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 2295 குடும்பங்களைச் சேர்ந்த 7258 பேர் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, களுத்துறை மாவட்டத்தில் உள்ள மதுகம பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள வெலிகெபொல, எஹெலியகொட மற்றும் கலவான பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் குடிநீர் நெருக்கடியை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே மக்கள் நீரை பயன்படுத்தும்போது சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)